Sunday, March 14, 2010

மறு துருவம்

பெண்ணே நீ
அக்காலம் தொடங்கி
இக்காலம் வரை
அடிமைக் குளத்திலே
வாழ வந்தாயாயடி!!!

உன் மனதை
அறியவும் புரியவும்
புதிதேனும் ஓர்
ஜென்மம்
பிறப்பெடுத்துத் தான்
வரவேண்டுமோடி!!!

உனக்கென ஆசை
இருந்தப் போதும்,
அதை வெளிப்படுத்தக்
கூட யாரேனும்
அங்கீகாரம் தர
வேண்டியதாய்
உள்ளதோடி!!!

எப்பொழுதும் அனைவரின்
உணர்ச்சிகளுக்கு மதிப்பை
ஊட்டும் நீ,
உன் உணர்ச்சிகளுக்கு
மட்டும்
பரிசீலனைக் கூட
இல்லாமல்
போவது ஏனோடி!!!

உனக்குள் இருக்கும்
இரு முகங்களில்
ஒன்றை மட்டும்
வெளி உலகிற்கு
காட்டும் நீ
மற்றொரு முகத்தை
காட்ட மறுப்பது
ஏனடி!!!

உனக்கென வைத்திருக்கும்
அறையிலிருந்து
வெளியே வர
எழுவாயடி,
உலகே உன்
முகத்தைக் காண
சந்தர்ப்பம் தருவாயடி...!!!

Sunday, February 14, 2010

கண்மணி

தாயின் அழகை ரசிப்பதில் தொடங்கி,
இயற்கையின் எழிலை ரசிக்கிறேன்...
குழந்தையின் சிறப்பை ரசிக்கிறேன்...
நட்பின் பிணைப்பை ரசிக்கிறேன்...
காதலின் தனித்துவத்தை ரசிக்கிறேன்...
இறைவனின் படைப்புகளை ரசிக்கிறேன்...
இவை அனைத்தையும் ரசிக்க உதவிய
'கருவிழியே' என் 'கண்மணியே'
உன்னை காண மட்டும்
இன்னோர் கருவி தேவையாய்
உள்ளதே...!!!

Sunday, January 10, 2010

நினைவுகள்

தன்னந்தனியாய் கடற்கரையில்
நடந்தேன்,
தனிமையை ரசித்தபடி நான்...
சிறிது நேரம் கழிந்தே
உணர்ந்தேன்,
என் அருகில் நீ இருந்ததை..!!!
ஆம்,
உன் மெல்லிய கையின் தழுவலை
உணர்த்தியது,
இந்த அருமையான தென்றல்...
உன் இனிமையான பேச்சுக்களை
என் காதில் ஓதியது,
இந்த முரசொலி கலந்த அலைகள்...
உன் இருப்பை நிஜமாக்கியது,
நீ பரிசாய் அளித்த
"உன் நினைவுகள்"!!!...