Friday, December 25, 2009

புகழ்

பெண்ணே நீ,
பிறந்த வீட்டின் புகழை
நிலைநாட்ட வந்தவள்ளா??!!!
புகுந்த வீட்டின் புகழை
நிலைநாட்ட வந்தவள்ளா??!!!
பார் புகழ, தன் புகழை நிலைநாட்டடி.....
அனைத்து புகழும் ஆங்காங்கே
அதன் புகழை
பெற்று நிற்க்கும்...!!!



Sunday, December 13, 2009

நிலாவே வா


அம்மா நிலாவை காட்டி அன்று
சோறு ஊட்டினாள் அவள் குழந்தைக்கு,
இன்றோ அவளே அதே நிலாவை காட்டி
சோறு ஊட்டுகிறாள் அவள் பேத்திக்கு.....
அவள் தலையில் இருந்த
நறை மட்டுமே அவளை
வேறுபடுத்தியது
அப்போதிர்க்கும் இப்போதிர்க்கும்...
எனினும் ஒன்று மட்டும்
அன்றும் இன்றும்
ஒன்றாகவே இருந்தது!!
நிலா தன்னிடம் வரும் என்றும், தாம்
நிலா-பந்துடன் விளையாட போகிறோம்
என்னும் சந்தோஷத்துடனும், சோற்றை
மட மட வென்று முழுங்கும்
குழந்தைகளின் கனவுகள்..!!!

Tuesday, November 10, 2009

எவ்வழி ???


செல்லும் இடத்திலெல்லாம்,
புதிதாய் ஓர் கற்பனை பிறக்க...
அதன் வாயிலில் எப்பொழுதுமே
நிற்கிறாய் நீ!!!
கற்பனை வழியால் நீயா !!
உன் வழியால் கற்பனையா !!
எனினும் இரண்டுமே அழகு தானடி !!!!

Wednesday, October 28, 2009

கவி துளி!!!


பறந்த வானம் போன்ற கற்பனைகள் !!
அதில் பொழியும் சொற்களோ நட்சத்திரங்கள் !!
பறந்து சிறகடிப்பதோ சிந்தனை சிதறல்கள் !!
அருவி போன்று பெருக்கெடுப்பதோ வரிகள் !!
உன்னை நினைக்கையிலே பிறக்கின்ற கருத்துக்கள் !!
உணர்பவர்களுக்கு நீ அளிப்பதோ பரிமாணங்கள் !!
அன்பர்களுக்கு நீ கொடுப்பதோ உன்னதங்கள் !!
வெவ்வேறு நிலையிலும் எடுப்பதோ தோற்றங்கள் !!
கவிதையுள் கவிதையை பொழியும் திறன்கள் !!
கவிதைக்கே கவிதையை காட்டும் வலிமைகள் !!
துளியிளிருந்தும் பிறக்கும் பாரம்பரிய எண்ணங்கள் !!
பிரபஞ்சமே உன் வர்ணனையால் வென்றவர்கள் !!!!

Thursday, October 8, 2009

என்ன விளையாட்டு

அனைத்து விளையாட்டிலும் ஆர்வம் காட்டி
போட்டி மனப்பான்மையுடன் திகழும் நான்...
என் உணர்வுகளுடன் விளையாட நினைக்கும்,
என் இனிய சுற்றத்தாரிடம் மட்டும்
மனம் தளர்ந்து போகிறேனே.....
இது
மனத் தளர்ச்சியின் அறிகுறியா??
அல்லது
பாசப் பிணைப்பின் அறிகுறியா??
இவர்களுக்கு
வெற்றியை பரிசாய் அளிப்பதா???
அல்லது
தோழ்வியை பரிசாய் அளிப்பதா???

Friday, October 2, 2009

காலமெல்லாம்


உன்னை சந்தித்த நொடி தான்,
என் வாழ்வின் பொக்கிஷத்தை அடைந்த நொடி...

உன்னிடம் பேசிய நிமிடம் தான்,
என் வாழ்வை விரும்ப ஆரம்பித்த நிமிடம்...

உன்னுடன் பழகிய மணிநேரம் தான்,
என் வாழ்வில் மகிழ்ச்சி அடைந்த மணிநேரம்...

உன்னருகில் இருந்த நாட்கள் தான்,
என் வாழ்வின் கவலைகளை மறந்த நாட்கள்...

உன்னோடு கழித்த மாதங்கள் தான்,
என் வாழ்வே பரவசத்தை தொட்ட மாதங்கள்...

உன் நினைவோடு பயணிக்கும் ஆண்டுகள் தான்,
என் வாழ்க்கையில் முழுமையை அடைந்ததன் அறிகுறிக்கான ஆண்டுகள்!!!

Thursday, September 24, 2009

தொலைந்தது எது?!!

நீ என் அருகில் இருந்த வரை........
இன்பத்தை நேசித்தேன்!!
பயத்தை வெறுத்தேன்!!
தனிமையை வென்றேன்!!
பாசத்தில் மூழ்கினேன்!!
சுற்றத்தை மதித்தேன்!!
கவலையின்றி இருந்தேன்!!
என்னையும் காதலித்தேன்!!
ஆனால் இப்போ இவை அனைத்தையும்
நான் தொலைத்தது போல் இருக்கின்றதே.....
தொலைத்தது,
இவற்றையா அல்லது உன்னையா???
நான் உன்னைத் தொலைத்தேனா?!!
நீயாக விரும்பித் தொலைந்தாயா?!!


Wednesday, September 16, 2009

இவளிற்கு ஈடுண்டோ!!!


வயிற்றில் உதைத்தேன், தடவி கொடுத்தாய்...
மார்பில் மிதித்தேன், அன்புடன் அரவணைத்தாய்...
பேச ஆரம்பித்தேன், செல்லமாய் நேசித்தாய்...
தடுக்கி விழுந்தேன், மார்பில் சுமந்தாய்...
பயத்தில் சூழ்ந்தேன், தைரியத்தை தந்தாய்...
வலியில் துடித்தேன், மனமுருகி அழுதாய்...
விஷத்தை ருசித்தேன், தானறியாது பறித்தாய்...
சுற்றத்தை வெறுத்தேன், பாசத்தை பொழிந்தாய்...
தனிமையில் இருந்தேன், பக்கத்தில் அமர்ந்தாய்...
யாவையும் சிந்தித்தேன், அனைத்திலும் உயர்ந்தாய்...
காரணம் யூகித்தேன், அழகாய் சிரித்தாய்...
யாரிற்கும் ஈடற்றவளாய், திகழ்ந்தாய்...
எனக்கு மட்டுமே அரிதாய், கிடைத்தாய்...
என் உயிர்
"தாய்"!!!

Saturday, September 5, 2009

உனது இசைக்கோவை


முத்துக்களின் சிதறல் ஓசையில் இனிமை கண்டேன் !!
மழையின் சாரல் ஓசையில் இனிமை கண்டேன் !!
கடலின் அலை ஓசையில் இனிமை கண்டேன் !!
குழலின் இசை ஓசையில் இனிமை கண்டேன் !!
குயிலின் கூவும் ஓசையில் இனிமை கண்டேன் !!
சலங்கையின் மணி ஓசையில் இனிமை கண்டேன் !!
இவை அனைத்தையும் விட ஓர் மென்மையான இனிமையை கண்டேன் !!
உன் குரல் ஓசையின் இனிமைக்கு முன் உலகின் அனைத்தும் வழுவிழந்ததை கண்டேன் !!!!

Saturday, August 22, 2009

அழகே உருவானாயடி

கிளியிற்க்கோ அழகு அதன் பச்சையினாலடி!!
மயிலி்ற்க்கோ அழகு அதன் தோகையினாலடி!!
மானி்ற்க்கோ அழகு அதன் கொம்பினாலடி !!
குயிலி்ற்க்கோ அழகு அதன் ஓசையினாலடி !!
உனக்கோ அழகு எதனாலடி ??
உச்சி முதல் உள்ளங்கால் வரை,
நீ அழகாய் தெரிந்தாயடி!!!!


Monday, August 17, 2009

விவாக நாள்

நான் என்னும் பிரபஞ்சத்திலிருந்து
வெளியேறி,
நாம் என்னும் கூண்டிற்குள் புகும்
பொன்னாள்!!!


Friday, August 7, 2009

தித்தித்ததே...

எப்பொழுதுமே என் கண்ணிலிருந்து பெருகிய
கண்ணீர் உவர்ப்பாக இருந்த போதிலும்,
உன் நினைவால் பெருகிய கண்ணீர் மட்டும்
இனிக்கின்றதே!!!
இவ்வாறு அளவற்று இனிப்பை சேர்த்து,
என் வாழ்வை சுவையுற செய்த உமக்கு
என் கோடான கோடி நன்றிகள்...

Monday, August 3, 2009

பிரதிபலிப்பு


ஆகாயத்தில் படர்ந்துக் கிடக்கின்ற கருமையான பாயில்
எண்ணற்று சிதறிக் கிடக்கின்றதே வெள்ளை முத்துக்கள்,
இந்த முத்துக்களுக்கு வெள்ளை நிறம் எவ்விடமிருந்து வந்தது???
நிலாவின் எதிரொளியா!!!!
அல்லது
தேவதைகளுடைய சிரிப்பின் எதிரொளியா!!!!
இல்லை
இப்புவியின் நல் இதயங்களின்
எதிரொளி !!

Tuesday, July 28, 2009

எனது வாழ்த்துக்கள்...

வெறும் காகிதமாய் இருந்த என் வாழ்க்கையில்
சித்திரம் வரைந்த ஓவியனானாய் !!
வெறும் பாறையாக இருந்த என் வாழ்க்கையில்
சிற்பம் செதுக்கிய சிற்பியானாய் !!
வெறும் வரிகளாக இருந்த என் வாழ்க்கையில்
இசை கொடுத்த கலைஞனானாய் !!
இவ்வாறு என் வாழ்க்கையை
ஒவ்வொரு நிலையிலும் பரவசம்
அடைய செய்த என் உயிர் தோழர்களே
தங்களுக்கு
எனது அன்பும் நன்றியும் கலந்த
" நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் "


Sunday, July 26, 2009

சரித்திர காதல்

மெல்லிய கருவரையாய் திகழ்ந்தாயே.....
எனவே தான்,
உன் மீது காதல் வசப்பட்டவர்கள்
பல கோடி...
இருப்பினும்,
நீ காதல் வசப்பட்டதோ
சில லட்சம் மீது தான்...
இதனாலேயோ என்னவோ
அவர்களை மட்டும் உன்னுடன்
அழைத்து சென்று விட்டாய்,
ட்சுனாமி என்னும் ஓர்
பெயரை கொண்டு!!!
இதன் பெயரால் நீ
சரித்திரத்தில் இடம் பிடித்தாய்...
ஆனால் காதல் மோகத்தால்,
உன் பல லட்ச காதலர்களின்
பார் புகழெய்தும் கனவுகளை
சிதறல்களாய் சிதறி விட்டாயே.....


Wednesday, July 22, 2009

இயற்க்கையின் வித்து


பெய்யாத மழையின் சாரலில் நநைந்தேன்!
சுடாத வெயிலின் அனலில் எரிந்தேன்!
ஓடாத அருவியின் பெருக்கில் நீந்தினேன்!
மலராத மொட்டின் ஸ்வாசத்தில் மிதந்தேன்!
ஆம் இவ்வனைதிலும் நான் மகிழ்ந்தேன்...
ஆனால் அனைத்தையும் உணர்ந்தேன்,
இவையாவும்,
மாயையின் விளையாட்டென்று
கண்விழித்தப் பிறகே நான்.....

Monday, July 20, 2009

எவ்விடம் வலிமை???

பேசியதோ, கேட்டதோ, கண்டதோ எதுவாக இருப்பினும்...

அன்பு கலந்த புன்னகையுடனும், அரவணைத்த அந்த கைகளின் மேன்மையுடனும்

தன் செல்லப் பெயரை கேட்க்கும் இந்த தருணமே

அனைத்தையும் மறக்க செய்தனவே.......

இத்தனை வலிமை கொண்டதோ பாசம் !!!!!!!!!



Monday, July 13, 2009

உணர்ந்தேனே அனைத்தினிலும்!!!


தழுவிய கரங்களின் மென்மையிலும்,

தந்த முத்தத்தின் சிலிர்ப்பினிலும்,

நோக்கி சிரித்த அன்பினிலும்,

உணர்ந்தேனே நான் முழுமையிலும்,

அந்த இறைவனின் படைப்பை, இந்த குழந்தையினிலும்!!!

ரோஜா இதழ்கள் எங்கே???


இருபத்தைந்து வருடங்கள் கடந்த பாதையில்
ரோஜா இதழ்களும் அதன் முர்க்களுமாய் படர்ந்து கிடந்தனவே!!
ஆனால் இன்றோ
அதே பாதையை நினைவுக் கூர்ந்தால்,
நினைவில் நின்றவை என்னவோ
முற்கள் மட்டுமாகவே காட்சியளிக்கின்றதே
அப்போது
அந்த ரோஜா இதழ்கள் எல்லாம் எங்கே சென்றனவோ???

Thursday, July 9, 2009

மெய் மறந்தது ஏனோ?

மற்றவர்களின் கவிதைகளை

படிக்கும் தருணத்திலும்

கேட்க்கும் நொடியிலும்

மெய் மறந்து வியப்படைந்த நான்,

என்னாலும் கவிதை என சில துளிகளை

தெளிக்க இயலும்

என மறந்து போனது

ஏனோ ?????????????



ஒற்றையின் சாரல்

ஞாயிறு தொடங்கி சனி வரை
உன் நினைவாய் மூழ்கிக் கிடந்த எனக்கு,
அரிதே ஒரு பரிசை கொடுத்தாய்!
அதற்க்கு ஈடு வேறெதுவும் இவ்வுலகில் இல்லையே!!
அதன் இன்பத்தில் முழ்கிய என்னை மெய் மறந்தேனே!
சுற்றத்தையும் நட்ப்பையும் துறந்தேனே!
ஆம்
தனிமை என்னும் அமைதிக் கடலில் மிதந்துக் கொண்டிருக்கிறேன்,
மன நிறைவின் உச்சியில் நான்...
இறைவா எத்தனை வித்தைகள் என்னைக் கொண்டு புரிகிறாய் நீ!!
இன்னும் எத்தனை வித்தைகள் காணப்போகிறாய் நீ !!!!!


இறுதி இதழ்


தன்னிடமிருந்து ஒவ்வொரு இதழும் ஒன்றொன்றாக உதிரும் பொழுது,
தான் சவப்பெட்டியை நெருங்குகிறோம் என்று எண்ணுகிறது அந்த மனசு!
ஆனால் தன்னிடம் இன்னும் எத்தனை இதழ்கள் இருக்கென்று தெரியாது,
உதிர்ந்த இதழே தன்னுடைய இறுதி இதழாக இருக்கக் கூடாதா எனத்
துடிக்கிறது!!!...

என் காதலன்...

சந்திரன் போன்ற முகமும் சிற்றிடையும் கொண்டவள்
என என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி வர்ணித்தவன்
எவனோ!!!
கவிஞனா?!..
ஓவியனா?!..
சிற்பியா?!..
ஆம் இவ்வனைத்தையும் ஒருங்கே கொண்ட அந்த கலைஞன்
என் உயிர் காதலன்
எனது
" மனசாட்சி "